நமக்கு யார் போட்டி?
Sunday Letter

நமக்கு யார் போட்டி?

உங்களுக்கு / நிறுவனத்திற்கு / நமக்கு யார் போட்டி? 

இந்தக் கேள்வியைப் பலமுறை என்னிடம் பலர் கேட்டிருக்கின்றனர். என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறேன். நெட்ஃபிளிக்ஸ்ற்கு அமேசான் ப்ரைம் போட்டியா? தூக்கம் தான் நெட்ஃபிளிக்ஸ்ற்கு போட்டி என்று அதன் நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் ஒரு முறை சொன்னார்.

நாம் ஒருவரைப் போட்டியாக நினைத்து, அவர்களுடன் வேலை செய்யாமல் முறித்துக் கொள்வது நாம் செய்யும் தவறு. இந்தத் தவறை நான் செய்திருக்கிறேன்.

பள்ளியில் படிக்கும்போது, பல போட்டிகள், நாடகங்கள் என்று கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு நாடகத்தைத் தலைமையேற்றுத் நடத்தும் பொறுப்பு எனக்குத் தரப்படாமல் இன்னொரு நண்பருக்குத் தரப்பட்டது. அவர் என்னை விடத்திறமையானவர்.

என் நண்பன், நாடகத்தில் பங்கேற்கும் ஒரு நல் வாய்ப்பை எனக்கு வழங்கினான். நான் மறுத்துவிட்டேன். ஆனால் நான், என்னைவிடத் திறமையான நண்பனைப் போட்டியாளராகக் கருதாமல், அந்த நண்பனுடன் நாடகத்தில் பங்கு கொண்டு என்ன கற்றுக் கொள்ளலாம், என் திறமைகளை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் என்று அணுகி இருக்க வேண்டும். இதுபோல் செய்யும்போது நம் திறமைகள் வளரும்.

திறமையானவர்களை போட்டியாளராகக் கருதாமல் அவர்களுடன் கூட்டு சேருவதே சாமர்த்தியம்.

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top