தமிழால் நான் பயன் அடைந்து உள்ளேன். என் வேர்களோடு ஒன்றி இருக்க தமிழ் ஒரு பாலமாக இருக்கிறது. சமநிலையில் இருக்கவும் தமிழ் எனக்குப் பயன்படுகிறது.
தற்போது உள்ள தமிழின் நிலையை மாற்றுவது என்பது கடினமான செயல் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் தற்போது ஒரு மூலோபாய ஊடுருவல் புள்ளியில் (Strategic Inflection Point) உள்ளோம். இப்போது தமிழின் நிலையை மாற்றவில்லை என்றால், நாம், நம் தமிழை விட்டு வெகுதூரம் சென்று விடுவோம். இப்படியொரு நிலை வருமானால், நாமும், நம் வருங்கால தலைமுறையினரும் நம் அடையாளத்தை இழந்து விடுவோம்.
கடந்த நூறு வருடங்களில், சமீபத்திய இணைய உலகில், தமிழ் பெரும் அளவு வளராவிட்டாலும், தற்போது உள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) யுகத்தைப் பயன்படுத்தி நாம் விட்டதைப் பிடித்து விட முடியும். ஆனால் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும்.
சீன மொழி தொழில் நுட்பத்தோடு வளர்ந்தது போல், நம் தமிழ் மொழியும், பிற இந்திய மொழிகளும் வளர வேண்டும். செயற்கை நுண்ணறிவோடு, தொழிலோடு தமிழ் வளர வேண்டும்.
சரி, பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டுமே இருந்தால் எப்படி? என்ன செய்யப் போகிறோம்?
தொடரும்..
அடுத்த வாரம் ….
நன்றி