என்ன செய்ய? எப்படி செய்ய?
என்ன செய்ய? எப்படி செய்ய?

என்ன செய்ய? எப்படி செய்ய?

வாட்ஸ்அப்  குழுக்களில் அடிக்கடி பதிவிடுவது இல்லை என்றாலும், அவ்வப்போது பார்ப்பது உண்டு. நான் உள்ள ஒரு குழுவில் ‘நெக்ஸ்ட் வேவ்’ நிறுவனத்தை நிறுவிய ராஜேந்திரன் தமிழில் குறுஞ்செய்திகளைப் பதிவிட்டார். இதுபோல இப்போது  தமிழில் பதிவிடுவது அரிதாகிவிட்டது,

தமிழை, தமிழில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று நானும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். செயற்கை நுண்ணறிவு (செ.நு.) இதை எளிதாக்குகிறது என்றார் அவர்.

இது போன்று இன்னொரு உரையாடல், வேறு ஒரு குழுவில் வயிறு மற்றும் குடல் நல மருத்துவர் ஹரிபிரசாத் பாஸ்கரன். எனக்கும் இதுபோல் தமிழில் குறுஞ்செய்தி அனுப்ப ஆசைதான். ஆனால் என்ன செய்ய? எப்படி செய்ய என்று என்னிடம் கேட்டார்.

நான் WISPR Flow என்ற செயலி பயன்படுத்துகிறேன் என்றேன். முயற்சி செய்தேன், வரவில்லை என்றார்.

நண்பர் ஹரி சொல்வது சரிதான். தமிழை தமிழில் எப்படி தட்டச்சு செய்ய வேண்டும் என்பது எளிதாக அனைவருக்கும் புரியும்படி இல்லை.

நம் கோதை மொழி ஆய்வகத்தில் பிப்ரவரி 2025-ல் ஒரு விசைப்பலகையை அறிமுகம் செய்தோம். அது தமிழ் கற்க பயன்பட்டாலும் எளிதாக இருக்கவில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில்  செ.நு. தொழில்நுட்பத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். இதை நாம் சரியாகப் பயன்படுத்தினால் நம் தமிழுக்கு ஒரு பெரிய வரம்.

மின்னணு சாதனங்களில், செயலிகளில் தமிழை எப்படி பயன்படுத்த வேண்டும், தட்டச்சு செய்ய வேண்டும் போன்ற பயிற்சிகள் தேவை.

இவை நாம் பள்ளிகளில் இருந்து தொடங்க வேண்டும்.

தமிழ் வளரும்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top