நம் அன்றாட வாழ்வில் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் செயல்பட இயலும். ‘க்’ என்ற மெய்யெழுத்தும் ‘அ’ என்ற உயிரெழுத்தும் சேரும்போது ‘க’ என்ற சார்பெழுத்து ஆகிறது.
க, ‘க்’கையும், ‘அ’வையும் சார்ந்து செயல்படுகிறது.
இதுபோல் நாம் பிறக்கும்போதும், வளரும்போதும் மருத்துவரையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மற்றும் பலரையும் சார்ந்து இருக்கிறோம்.
ஒரு நிறுவனத்திலோ, இயக்கத்திலோ இணைந்து பணியாற்றும்போது அதன் கலாச்சாரம், சட்டதிட்டங்கள் ஆகியவற்றைச் சார்ந்துதான் இயங்க இயலும்.
அவ்வாறு சார்ந்திருக்க விருப்பமில்லை என்றால், உடனிருந்து பணியாற்ற வாய்ப்பில்லாமல் போகும். இது போன்று சார்ந்து செயல்படும் நேரத்தில் விட்டுக்கொடுப்பது கோடி நன்மைகள் தரும்.
எளியோர் வலியோரைச் சார்ந்தே உள்ளனர். அதுபோல் வலியோரும் எளியோரைச் சார்ந்துதான் இயங்க இயலும். ஒருவரை ஒருவர் சார்ந்து இயங்கும் உலகத்தில், அனுசரித்துத்தான் போக வேண்டும்.
சார்பு நிலை எடுக்கும்போது, ஏன் அவர்கள் இப்படி சார்ந்திருக்கிறார்கள் என்று பலர் கேள்வி கேட்கத்தான் செய்வர்.
ஆனால் இந்தச் சார்பு நிலையால் நாம் சார்ந்துள்ள சமூகத்திற்கு என்ன பயன் என்று எண்ணும்போது அனைவரும் பயனடைவார்கள்.
ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பது பெரும் பலம். நன்மைகள் பல உண்டு.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்