தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, அது, இது என்று பல்வேறு விவாதங்கள் செய்கிறோம். ஆனால் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) பாடப்புத்தகங்களை மாணவர்களுக்குச் சரிவர விநியோகம் செய்ய முடியவில்லை.
உதாரணமாக, இந்தக் கல்வி ஆண்டில் இருந்து ஒன்பதாம் வகுப்புக்கு பாடப்புத்தகங்கள் மாறுகின்றன என்று ஏற்கனவே அறிவித்தனர். பள்ளிகளும் ஏப்ரல் மாதத்தில் திறந்தன. ஆனால் இன்று வரை பல சி. பி. எஸ். இ பள்ளிகளில் கணிதம், சமூக அறிவியல் (Social Science) போன்ற பல பாடப்புத்தகங்கள் சரிவர கிடைக்கப்படவில்லை.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) புத்தகங்கள் இல்லாமலேயே பல மாதங்கள் மாணவர்கள் படிக்கும் நிலை இன்று உள்ளது.
மாணவர்களும் “நம்ம ஊர்னா இப்படித்தான்” என்று பழகிவிட்டனர். இது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று.
கல்வியில், நீட் மறுதேர்வு, 12ம் வகுப்பு மாணவர்களின் முழுமையற்ற விடைத்தாள் மின்னணு நகல்கள், மறுமதிப்பீட்டு தாமதங்கள் என்று எத்தனை குளறுபடிகள்.
ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை என்ன செய்தாலும் பரவாயில்லை உயர்த்த வேண்டும்! என்பதில் இருக்கும் கவனம், நம் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும், நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதிலும், பாடப்புத்தகங்களைச் சரியாக வழங்குவதிலும் இருக்க வேண்டும்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்