நீட் குளறுபடிகள்
NEET Controversies

நீட் குளறுபடிகள்

சில நாட்களுக்கு முன் என் மகள், “அப்பா, நீட் வினாத்தாள் கசிந்து (leak) விட்டதாம்… தெரியுமா?” என்று கேட்டாள். 

இது எப்ப நடந்தது என்று தேடினேன் வருத்தம் மேலோங்கியது. 

மாணவர்கள் மறுபடியும் ஜூன் 21ம் தேதி நீட் தேர்வு எழுத வேண்டுமாம். 2025லும் நீட் குளறுபடிகள் நடந்தன. 2024லும் நீட் வினாத்தாள் சில இடங்களில் கசிந்தது.

இதுபோல் வருடா வருடம்  நீட் முறையில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நம் மாணவர்களுக்கு எப்படி நம் அரசின் மீதும், தேர்வு முறையின் மீதும் நம்பிக்கை வரும்? 

இந்த வினாத்தாள் கசிவு மக்களாகிய நமக்கும் பழகி விட்டது. 

நம் செய்தி ஊடகங்களும் இது குறித்து பெரும் அளவில் விவாதித்ததாகத் தெரியவில்லை. 

நம் இந்தியா தானே!  இப்படித்தான் இருக்கும் என்று சிலர்/பலர் கூறுவதைக் கேட்க முடிகிறது. பெரும் சீர்திருத்தங்கள் எல்லாம் நம் நாட்டில் இன்னும் நிகழவில்லை, இதுபோன்ற சூழல் நம் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

இந்தியா போன்று பல மொழிகள் பேசும் ஒரு நாட்டில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் நம் மாநில அரசால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

அல்லது வேறு என்ன செய்ய வேண்டும்? நம் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் வருத்தம் தருகின்றன.

இந்த நீட் குளறுபடியால் பெரிதும் பாதிக்கப்படுவது மாணவர்களும் பெற்றோர்களும்தான். மே 3 ஞாயிறு கடிதத்தில் டம்மி பள்ளிகள் பற்றி எழுதியிருக்கிறேன். இதையெல்லாம் நினைக்கையில் கோபம் வருகிறது.

என்ன கொடுமை சரவணன் இது?

நன்றி 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top