சிறு வயதில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடக்கும் விழாவிற்கு சென்றிருந்தேன். சிறிய, அழகிய வீடு, பலரும் வந்திருந்தனர். அப்போது அங்கே வந்த ஒருவர், வாழ்த்திவிட்டு வந்த நொடியிலேயே கிளம்ப வேண்டும் என்றார்.
உறவினர், அவரிடம், நீங்கள் காலை சிற்றுண்டி உண்ட பின்பு தான் செல்ல வேண்டும் என்றார். அவரோ, “ஏன்டா வந்தோம்” என்பது போல் கோபித்துக்கொண்டு அவர் மனைவியிடம் “நான் சொன்னேன் பாரத்தியா, இதற்குத்தான் இங்கெல்லாம் வரக் கூடாது” என்பது போல் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கோபம் கொண்டவர் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் அங்கு வந்துவிட்டார். உறவினரை வாழ்த்தி பரிசுகள் தந்து அங்கேயே அமர்ந்து விட்டார்.
கோபம் கொண்டவர் காலை சிற்றுண்டி, அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் அருகில் அமர்ந்து உண்ட பின் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து உரிமையாளர் கிளம்பிய பின் உறவினர் வீட்டை விட்டுச் சென்றார்.
எங்கு யார் வருவார்? எப்போது என்ன நடக்கும்? என்று கணிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொள்ள இது ஒரு சிறந்தத் தருணமாக அமைந்தது .
நன்றி
கார்த்திக் சிதம்பரம்