ஒரு ஊரில் வசதியான குடும்பம் ஒன்று இருந்தது. கணவன் நிரஞ்சனுக்கு 32 வயது. மனைவி லதாவிற்கு 30. இருவரும் தேவை என்றால் நன்கு பழகுவர். வேலை முடிந்தவுடன் கண்டுகொள்ளாமல் தூக்கி எறிந்து விடுவர்.
அவர்கள் வீட்டில் வேலை செய்வோர், ஒரு சிறு தவறு செய்தாலும், வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்று கூறி வீட்டுக்கு அனுப்பாமல், தொடர்ந்து வேலை வாங்குவர். மீனா என்ற 15 வயது நிரம்பிய பெண்ணும் வீட்டில் வேலை செய்தால். மீனா, பலமுறை நிரஞ்சனிடம் திட்டு வாங்கியும், எதுவும் பேசாமல் வேலை முடிந்தவுடன் எதுவும் நடக்காதது போல் அவள் வீட்டுக்குச் செல்வாள்.
மீனா இல்லாமல் நிரஞ்சன் வீட்டில் எந்த வேலையும் நடக்காது. ஆனாலும் மீனாவை தினமும் திட்டுவர்.
காலம் ஓடியது. வசதியான குடும்பத்தின் ஆடம்பரச் செலவுகளால் வசதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. மீனா நன்றாகப் படித்தாள். அவளின் 22 வயதில் ஒரு தொழில் நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலைக்குச் சேர்ந்தாள். சில வருடங்களில் உயர் பதவிக்கு முன்னேறினாள்.
நிரஞ்சன், சில பல காரணங்களால் அவர் செய்த மென்பொருள் வேலையை, 42 வயதில் இழந்தார். மீண்டும் வேலை தேடினார். ஒரு நல்ல தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. மிகச்சிறந்த குழு ஒன்றில் பணி நியமனம் செய்யப்பட்டார்!
அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்………….. மீனா.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்