சிறு வயதில், நானும், என் தம்பியும் வளரும்போது அம்மா சொந்தம், அப்பா சொந்தம் என்று கூடி, ஓடி, ஆடி அனைவரிடமும் பேசித் தான் வளர்ந்தோம். அப்பத்தா, ஐயா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமா, மாமி என்று அனைவரிடமும் உரையாடி, சில சமயம் சண்டையிட்டு, நல்லது கெட்டது அறிந்து வளர்ந்த குடும்பச் சூழல் பிற்காலத்தில் நம் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஒருவர் எதிரியே என்றாலும் நாம் எதிரி என்று அறிவிக்கத் தேவையில்லை. அன்பு பாராட்டலாம். ஆனால், நான் இவரிடம் பேசமாட்டேன், அவரிடம் பேசமாட்டேன் என்று உறவை முறித்துக் கொண்டு, பேசாமல் இருப்பது ஒருவகை நகைப்புக்குரியது.
இதுபோல் செய்யும்போது பாதிப்புக்குள்ளாவது, நம்மைவிட, நம். பிள்ளைகள் தான் என்பதை நாம் ஏனோ அறிவதில்லை. அவர் எனக்குத் தீங்கு செய்தார். நான் பன்மடங்கு அதிகம் தீங்கு செய்வேன் என்றால் எப்படி? நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்துத் தானே வளர்கின்றனர்?
“உறவுகள்” என்ற ஒரு குடும்பச் சூழலில் வளரும்போது. பிள்ளைகளின் மன மகிழ்ச்சி பன்மடங்கு அதிகம் என்பதை நாம் நன்கு அறிவோம்
விட்டுக் கொடுப்பவர், கெட்டுப் போவதில்லை நன்றி
நன்றி.