நாம் என்னதான் ஒருவருக்கு நன்மை செய்தாலும் நல்லவராக இருக்க முற்பட்டாலும், சிலர் அவர்கள் செய்வது–போல் தான் செய்வர். சில சமயம், சிலரின் எண்ணம் பிறருடைய வீழ்ச்சியில் மகிழ்வதாகக் கூட இருக்கலாம். இது போன்ற சூழல்களில் எனக்குக் கோபம் வரும். சிலர் நம் கோபத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றே, நமக்குப் பிடிக்காத செயல்களைச் செய்யக்கூடும் ‘
இப்போதெல்லாம் இது செய்தால், அல்லது இப்படிப் பேசினால் கோபம் வரும் என்று அறிந்தே சிலர் பேசும்போது, நான் திரும்பப் பேசாமல் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறேன். என்னடா, இப்படிச் செய்கிறார்களே என்ற வருத்தம் இருந்தாலும், அதைக் கடந்து விடுகிறேன். சில மணி நேரத்தில் இது ஒரு மகிழ்வைத் தருகிறது.
ஒருவரின் எண்ணம் உயர்வாக இல்லை என்றால் அதற்கு நாம் வருத்தப்படத் தேவையில்லை. அது, அவர்களின் கற்றல், வெளி உலக அனுபவம், வாழும் சூழல் என்று பலவற்றைப் பொறுத்து எண்ணங்கள் மாறும்.
நல் எண்ணங்களை நாம் விதைக்கும்போது, அது பெரு மகிழ்ச்சியை நமக்குத் தருகிறது. உறவுகள் மேம்பட இப்பழக்கம் உதவுகிறது.
நல் வாழ்க்கை, நமக்கு வேண்டுமானால், நல் எண்ணங்களை விதையுங்கள். நம் எண்ணம்போல், நம் வாழ்க்கை
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்