2022, 23ஆம் ஆண்டில் மைக்கேல் ஹயாட் அவர்களின் தொழில் பயிற்சி (Business Cooching) வகுப்புகளில் சேர்ந்தேன். நாம் தொழிலில், செய்யும் வேலையில் திறம்பட செயல்படுவது எப்படி? போன்றவற்றை சொல்லித் தந்தார். அவரின் வகுப்புகளில் நான் கற்றுக்கொண்டது
நாம், ஒரு நாளில் அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும் என்று பெரிய பட்டியல் வைத்திருக்கத் தேவையில்லை. ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு செயல்கள் திறம்படச் செய்தால் போதுமானது. ஒருநாள் தொடங்கும் முன்னர், நாம் இன்று செய்ய வேண்டிய இரு பெரு செயல்கள் என்ன என்பதை சிந்தியுங்கள். அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
அந்த நாள் முடிவுறும்போது நாம் செய்ய வேண்டிய இரு பெருஞ் செயல்களைச் செய்தோமா? இன்று நம் இரு பெரு வெற்றிகள் என்ன? என்பதை எழுதுங்கள்
உதாரணமாக, இன்றே கணிதம், அறிவியல், வரலாறு, மொழி என்று அனைத்தையும் படிக்க வேண்டும் என்று இல்லாமல், ஒரு நாளில் கணிதத்தில் ஒரு பாடமும், அறிவியலில் ஒரு பாடமும் படித்தால் போதுமானது
இதுபோல், இரு பெரு செயல்கள் – வெற்றிகளைத் தினமும் எழுதுங்கள். சில வாரங்கள் கழித்து, திரும்பிப் பார்க்கும்போது, பல நல்ல செயல்களைச் செய்து இருப்போம்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்.