நன்றி தெரிவித்தல் (Thanksgiving)
Thanksgiving

நன்றி தெரிவித்தல் (Thanksgiving)

நன்றி தெரிவித்தல் (Thanksgiving) அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை ‘கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு நாள் விடுமுறைக்காக அனைவரும் காத்திருப்பர்.

2002 ஆம் ஆண்டு, சிகாகோ நகரில் என் முதல் நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடினேன். முந்தைய நாள் இரவு, மாணவர்களாகிய நாங்கள் தங்கியிருந்த வீட்டின் மளிகை பொருட்கள் தீர்ந்து விட்டன. பாலும் இல்லை. அடுத்த நாள் விடுமுறை தானே அன்று கடைக்குப் போய் வாங்கிக் கொள்ளலாம், வெளியில் சாப்பிடலாம் சமைக்கத் தேவையில்லை என்று இருந்தேன்.

வியாழக்கிழமை, மெதுவாக எழுந்து மதிய உணவு சாப்பிட உணவகத்திற்கு, சிகாகோ குளிரில் நடந்து சென்றால் எந்தக் கடையும் திறக்கவில்லை. ஆள் நடமாட்டம் இல்லை. உணவுக்கு, அன்று மிகவும் கஷ்டப்பட்டேன். பின்னர் தான், அன்று அனைவரும் வீட்டில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வான்கோழி சமைத்து கொண்டாடுவர் என்று தெரிந்து கொண்டேன்

இதற்கு அடுத்த நாள் கருப்பு வெள்ளிக்கிழமை (Blackday) அன்று, பொருட்கள் நல்லத் தள்ளுபடியில் கிடைக்கும். விடியற்காலை, வரிசையில் நின்று கடைக்குள் நுழைய வேண்டும். கூட்டம் அலைமோதும். முதல் முறை இதையெல்லாம் பார்த்து பழகியது பெரிய அனுபவமாக இருந்தது.

ஞாயிறு கடிதத்தைப் படித்து ஊக்கம் தரும் உங்கள் அனைவருக்கும், இந்த நன்றி தெரிவித்தல் வாரத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்.

Category: Sunday letter
Share
Download Download
Top