தமிழ்நாடு அறக்கட்டளை- சிகாகோ
Tamil Nadu Foundation Chicago

தமிழ்நாடு அறக்கட்டளை- சிகாகோ

சிகாகோவில், மே 24 – 26, 2024 நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு நிகழ்வில் (TNF – 50) பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்று பல நண்பர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

1974ல் அமெரிக்காவில் நம் தமிழர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று பன்மடங்கு வளர்ந்து நம் தமிழ்நாட்டிற்கு பல்வேறு வகைகளில் அரசு மள்ளி மாணவர்கள் படிக்க சிறப்பு வகுப்புகள், பெண்கள் முன்னேற்றம் என்று பெரும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

சிகாகோவில் நடந்த பொன்விழாவில் மூன்று மில்லியன் டாலருக்கு (24 கோடி) மேல் நிதி திரட்டப்பட்டது. இது போன்று திரட்டப்படும் நிதியில் சரியானப் பயனாளர்களைத் தேர்ந்தெடுத்து அரசு பள்ளி மாணவர்கள், பெண்கள் என்று எண்ணற்றப் பலர் முன்னேற அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் (volunteers) வேலை செய்கின்றனர். 

பிணைப்போடு, நம் தமிழகத்தில் இருப்பவர்களோடு ஒருங்கிணைந்து அரும் பணி ஆற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு பாலம் என்று கூட சொல்லலாம். இதனால் பயன் பெற்றோர் ஏராளம்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் செயல்பாடுகளில் இருந்து நாமும் நிறைய கற்றுக் கொள்ளலாம். 

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top