மாற்றம் ஒன்றே மாறாதது. ஒருவர் பதவியிலும், அதிகாரத்திலும் இருக்கிறார் என்பதாலேயே அவர்கள் சொல்லும், செய்யும் அனைத்தும் சரியாகிவிடாது.
பொதுச் சேவையில் ஈடுபடுவோர் அரைகுறையாக பேசுதல், எழுதுதல், வாக்குறுதிகள் கொடுத்தல் கூடாது என்று நம் மகாத்மா காந்தி ‘இந்தியன் கருத்து’ (Indian Opinion) என்னும் பத்திரிக்கை நடத்திய வேளையில் எழுதினார்.
வெற்றி குறிக்கோளாக இருப்பது நன்று. ஆனால் வெற்றிக்காக எது வேண்டுமானாலும் அறம் அற்ற முறையில் செய்யலாம் என்று செயல்படுத்துதல் தவறு.
எது வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், ஆட்சி ஒன்றே குறிக்கோள் என்ற நிலை தவிர்த்திட வேண்டும். அறம் சார்ந்து, ஆட்சியும், நம் செயல்களும் அமைதல் வேண்டும்.
இன்று ஒருவர்
நாளை வேறு ஒருவர்
தனி மனித விருப்பு வெறுப்புகளை விட சமூகமும் நாடும் உயர்ந்தது. நம் பிரதமருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வி அடைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
எதுவும் நிரந்தரம் இல்லை
நன்றி
கார்த்திக் சிதம்பரம்