தலையணையும் போர்வையும்
Pillow and blanket

தலையணையும் போர்வையும்

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக படுத்த போர்வையை மடித்து, தலையணையை ஒழுங்குபடுத்தி எடுத்து வைப்பேன். என் போர்வை மட்டுமல்லாமல், பிள்ளைகள் மற்றும் மனைவியின் போர்வையையும் மடிப்பது உண்டு.

சில சமயம் இதைச் செய்ய மறந்தால் மனைவி, “என்னங்க, போர்வையை மடித்து வைங்க…” என்று கூற, என்ன வேலை இருந்தாலும்… முதலில் அதை செய்துவிட்டுத்தான் அடுத்த வேலை.

சிறு வயதில் அப்பா, அம்மா சொல்லி இதையெல்லாம் செய்யவில்லை என்றாலும் போகப்போக பழகிக்கொண்டேன். ஆரம்பத்தில் சற்று சிரமம் இருந்தாலும்,

சில சமயம் என் மனைவியிடம் நான் ஏன் மடிக்க வேண்டும் …. நீயும் மடிக்கலாமே? என்றெல்லாம் கூறினாலும் இதை ஒரு விவாதம் ஆக்கி போர்வையை மடித்து வைக்காமல் இருப்பதற்கு சில நிமிடங்களில் அழகாக மடித்து வைத்து விட்டு நம் வேலையை செய்வது சிறந்தது என்பதை உணர்ந்து கொண்டேன்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக இதைச் செய்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பொழுதும் நன்றாக விடிகிறது..

தலையணையும் போர்வையும் இப்போதெல்லாம் எனக்காக விரும்பி மடித்து, எடுத்து வைக்கிறேன். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால் செய்து பாருங்கள்.

சில நாட்களில் மாற்றத்தை உணர்வீர்கள்.

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top