யானை டாக்டர்
Elephant Doctor

யானை டாக்டர்

ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதை அவரின் அறம் புத்தகத்தில் வாசித்தேன். யானைகளைப் பற்றியும், யானைகளுக்கு மனிதர்களால் ஏற்படும். தீமைகளைப் பற்றியும் மட்டுமல்லாமல், பொதுவாக மிருகங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

டாக்டர் கே… நிச்சயம் வாசிப்போரின் மனதில் நல்லதொரு பாதிப்பை ஏற்படுத்துவார். இப்படியும் மனிதர்களா என்று வாசிக்கும் போது தோன்றினாலும் இப்படித் தானே மனிதர்கள் இருக்க வேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

பல சமயம், நாம் வாழ்க்கையில் பிறரின் அங்கீகாரம் வேண்டி பல வேலைகளைச் செய்கிறோம். யார் அங்கீகாரம் நமக்குத் தேவை?

நாம் செய்ய வேண்டியதை செவ்வனே செய்தல் தானே நம் வேலை?

இதுபோல் செய்யும் போது நமக்கு ஒரு மகிழ்ச்சியும் ஏற்படும்.

குழந்தைப் பருவத்தில் தூங்கும் போது அம்மா அப்பாவிடம் ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்போம்.

நம் குழந்தைகள் நம்மிடம் கதை கேட்டால் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ கதையைச் சொல்லுங்கள். நாமும் மேம்படுவோம் நம் பிள்ளைகளும் மேம்படுவர்.

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top