அங்கமுத்து, செல்லமுத்து (ஒரு பக்கக்கதை)
ஒரு பக்கக்கதை

அங்கமுத்து, செல்லமுத்து (ஒரு பக்கக்கதை)

ஒரு நகரத்தில் அங்கமுத்து, செல்லமுத்து என்ற அண்ணன்-தம்பி இருவர் இருந்தனர். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பகை மூண்டது. இரு சகோதரர்களும், பார்த்தும், பார்க்காதது போல் செல்ல ஆரம்பித்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் போரை விட இவர்களின் சண்டை பெரிதாக இருந்தது. அண்டை நாடுகளின் பெரிய தலைவர்கள், நான் உதவுகிறேன், சண்டையை முடித்து வைக்கிறேன் என்று கூறி போரைத் தீர்க்க முயலுவது போல், உறவினர்கள் சிலரும் அங்கமுத்து, செல்லழுத்து இருவரிமும் பேசினர். சண்டை இன்னும் பெரிதானது.

தங்கள் ஊரில் உள்ள பொதுக்காரியம் ஒன்றுக்கு பங்காளிகள் அனைவரும் (அங்கமுத்து, செல்லமுத்து உட்பட ) சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தினர். அங்கும் இருவருக்கிடையிலும் சண்டை வந்தது. இப்படியாக ஒருவருக்கு ஒருவர் பேசாமலும், சண்டையிட்டும் வந்தனர்.

ஒரு நாள் காலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அண்ணன் அங்கமுத்து இறந்து விடுகிறார். செல்லமுத்துவிற்கு ஒன்றும் புரியவில்லை. அண்ணணின் இறுதிக் காரியங்களைச் செய்ய உதவுகிறார்.

சில நாட்கள் கழித்து செல்லமுத்துவிற்கு குறை. சொல்ல, சண்டை போட, முறுக்கிக் கொள்ள யாரும் இல்லாமல் போனது. நிறைய நேரமும் இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார் செல்லமுத்து. இது நான் வாழ்க்கை .

நன்றி… 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags: Tamil
Share
Download Download
Top