தூது
Messenger

தூது

தமிழ்நாட்டில் தேர்தல் காலம் இது. தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் உத்திகளை வகுப்பர். 

தூது அனுப்புவர். ஒவ்வொரு கட்சிக்கும் தூதுவர்கள் இருப்பர். அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் மட்டும் தான் தூது அனுப்ப வேண்டுமா? நாமும் தூது அனுப்பினால் என்ன? எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தானே? 

நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள, நம் தமிழை நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் வளர்க்க தூது அனுப்பலாம். பிள்ளைகள் எந்நேரமும் கைப்பேசிகளிலும், செயலிகளிலும் இருப்பது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. 

நாம் நம் தாய்மொழியில் பேசும்போது, எழுதும்போது மனநலம் இன்னும் சிறப்பாக இருக்கும், பிள்ளைகள் நன்கு வளர்வர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதற்காக நாம் தூது அனுப்பலாம். தூது பலகை விளையாட்டை நம் பிள்ளைகளோடு விளையாடலாம். 

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 ஆம் தேதி வரை சென்னை 

ஒய் எம்.சி.ஏ மைதானம் நந்தனத்தில் நடைபெறுகிறது. 

அங்கு அரங்கு எண் 390ல் தூது பலகை விளையாட்டை விளையாடலாம். 

பிடித்திருந்தால் வாங்கி வீட்டுக்கும் எடுத்துச் செல்லலாம்.

‘தூது’ விடலாம் வாங்க 

‘தூது’ விளையாடலாம் வாங்க

நன்றி… 

கார்த்திக் சிதம்பரம்.

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top