கானாடுகாத்தான் சந்தை
Market

கானாடுகாத்தான் சந்தை

கடந்த சனிக்கிழமை அன்று நம் CHATWITHKC  youtube தளத்தில் காரைக்குடிக்கு அருகில் இருக்கும் கானாடுகாத்தானில் வாரம் தோறு நடக்கும் ஞாயிறு சந்தை பற்றி ஒரு காணொளி பதிவிட்டேன். மற்ற சில காணொளிகளை விட youtube ன் படிமுறைத் தீர்வு (Algorithm) இதை மேலும் பலரிடம் கொண்டு போய் சேர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் வரை என் தந்தையின் உதவியுடன் எடுத்த இந்தக் காணொளியை லாரன்ஸ அழகாக 12 நிமிடத்திற்குத் தொகுத்தார். அனைத்துமே ஒரு கூட்டுமுயற்சி.

பல தொழில் முனைவோரை, சிறு தொழில் செய்வோரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. ஒருவர் தான் செய்வது குடிசைத் தொழில் என்றார். நாம் சொல்லி சந்தைப்படுத்துவது தானே! இதை சுய தொழில் என்று கூட சொல்லலாம் என்றேன்.

இன்னொரு தம்பதியும், கடையில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் 45 வருட திருமண வாழ்க்கை, 3 பிள்ளைகள், 7 பேரன் பேத்திகள் பற்றி கூறினர்.

சிறு பிள்ளைகள், தங்கள் அப்பா, அம்மா கடைகளில் உதவி செய்து கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. படிக்கும் போது பெற்றோர்களுக்கு உதவுவது பல கற்றல்களை நம் பிள்ளைகளுக்குத் தரும்.

நம் கானாடுகாத்தான் சந்தையில் வியாபாரம் செய்யும் நண்பர்களுன் உரையாடியது ஒரு சுவையான அனுபலமாக இருந்தது. இந்தக் காணொளியை நீங்கள் பார்க்க விரும்பினால், அதன் முகவரி இருத்துப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags: Tamil
Share
Download Download
Top