விதைப்போம்
விதைப்போம்

விதைப்போம்

2026 ஆம் ஆண்டின் முதல் ஞாயிறு கடிதம் இது. எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். சென்ற வருடத்தில் எதையெல்லாம் சிறப்பாகச் செய்தோம், எதை செய்யவில்லை என்பதையும் என் குறிப்புகளைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இவ்வருடத்தில் நம் இலக்குகள் என்னவோ, அது வெறும் இலக்குகளாக மட்டுமல்லாமல் செயல்படுத்துதல் வேண்டும் என்பது நாம் அறிந்ததே. இதற்கு கடினமாக உள்ளவற்றையும், சுவாரஸ்மில்லாதவற்றையும் பிடிக்கிறதோ இல்லையோ, தினமும் செய்தல் வேண்டும்.

உதாரணமாக ஒரு விளையாட்டு வீரர் காலையில் 4 மணிக்கு எழுந்து ஓடுவது என்பது எளிதான ஒன்று இல்லை தான். ஆனால் அவர் தினசரி பயிற்சி செய்ய வேண்டும்.

தொழில்நுட்பத் துறையில் விற்பனை செய்யும்போது, நம் ஒவ்வொரு உரையாடலையும் சி. ஆர். எம் (CRM) என்று சொல்லப்படும் மென்பொருள் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு இதை எளிதாக்கினாலும், தினமும் புதிதாக 3 அல்லது 5பேருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் நம் இலக்கை நாம் எட்டுவோம் என்றால்…. ஈரோடு தமிழன்பன் எழுதிய விதைக்க மறந்தவனே!

உனக்கு ஏன் அறுபடை ஞாபகம்?

என்று பள்ளியில் படித்த வாசகம் தான் ஞாபகம் வருகிறது. விதைப்போம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நன்றி.

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்.

Category: Sunday letter
Share
Download Download
Previous
Messenger
Next
Thank You 2025
Top