நாம் வாரம்தோறும் CHAT WITH KC யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடும் காணொளிகள், வாரம் தோறும் எழுதும் ஞாயிறு கடிதம் மற்றும் பலவற்றை நம் CHAT WITH KC இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அன்றாடம் பகிர்கிறோம்.
நாம் செலவு(விளம்பரம்) செய்து நம் பக்கத்தை சந்தைப்படுத்துவது இல்லை. வெகு நாட்களாக நம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை (பெரு வளர்ச்சி) இல்லாமல் தான் இருந்தது.
நமக்கு என்ன அவசரம், தானாக எண்ணிக்கை சுட்டும் என்றும் (Organic Growth) இவ்வருட இறுதிக்குள் பின்தொடர்வோர் எண்ணிக்கை 10,000 வந்தால் நன்றாக இருக்கும் என்றும், தான் நினைத்தேன்.
கடந்த வாரம், நம் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 10,000த்தைத் தாண்டி வளர்ந்து வருகிறது. இது மகிழ்ச்சியை தருகிறது.
தங்கள் அனைவருக்கும் நன்றி.
நம் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிர்வகிக்கும் லாரன்ஸ் மணி மற்றும் சூர்யா பிரகாஷ் இருவருக்கும் நன்றிகள்.
இந்த சந்தைப்படுத்தும் முயற்சியில் அவர்களுடன் சேர்ந்து நானும் நிறைய கற்றுக் கொண்டேன்.
இதை நல் வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதே நம் எண்ணமும், முயற்சியும்.
ஊக்கம் தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. பயணிப்போம் ஒன்றாக.
நன்றி