இரண்டு வாரங்களுக்கு முன்பு, சென்னையின் பிரதான சாலைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காணொளிப்பதிவாளர் நின்று கொண்டிருந்தனர். நானும் யாரோ முக்கிய மனிதர் வருகிறார் என்று நினைத்தேன் பின்னர்தான் புரிந்தது இது தேர்தல் காலம் வாகனங்களில் பணம் இருக்கிறது என்று சோதனை செய்கின்றனர்.
சோதனை செய்வதை அழகாக படமும் பிடித்துக் கொண்டு இருந்தனர்
என்ன வேடிக்கை… ஏற்கனவே தேர்தல் பரிசுப் பொருட்கள் வீடுகளுக்கு வந்தாகிவிட்டது . தேர்தல் நடக்கிறது பர பர .— சோதனை செய்கிறோம் பர, பர… இதனால் என்ன பயன்?
தேர்தல் ஆணைய விதிகளின் படி ஒரு வேட்பாளர் அவர் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிக்கு 40 லட்சம் ரூபாய்தான் செலவு செய்ய வேண்டும். இன்று திறந்தாலே அரசியல் தமிழ்நாட்டில் யூடியுப் பை விளம்பரங்கள் தான். இதற்கெல்லாம் யார் செலவு செய்கிறார்கள்! எங்கிருந்து பணம் வருகிறது?
என்னதான் ஈ.ரானில் போர் நடந்தாலும், கூகுள் (Google) நிறுவனத்திற்கு பெரும் லாபம் தான் உருவாக்கினால் கூகுள் யூடியூப் போன்ற நிறுவனங்களை உருவாக்க வேண்டும்’,
1990 முதல் 1996 வரை தேர்தல் ஆணையராக இருந்து, பல தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்த டி. என். சேஷன் ஞாபகம் வருகிறார்.
இன்று…தேர்தல் நகைச்சுவை இதுவும் கடந்து போகும். வாக்களிப்போம் .
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்