நான் அறிந்த ஒருவரிடம் உதவி ஒன்று கேட்டு, சந்திக்க நேரம் சில மாதங்களுக்கு முன் கேட்டேன். அவர் வெளியூர் செல்வதாகவும், நான்கு நாட்கள் கழித்து செல்வாய்கிழமை அன்று சந்திக்கலாம் என்றும் கூறினார்.
செவ்வாய் வந்தது!. காலையில் நினைவு படுத்தலாம் என்று ஒரு 8 மணி வாக்கில் என் கைப்பேசியில் வாட்ஸ் அப் செயலியைத் திறந்தேன். ஆனால் நான் செய்தி அணுப்பும் முன்னரே 7:51 மணிக்கு எனக்கு என்ன தேவையோ அது குறித்து ஒரு விரிவான செய்தியை அனுப்பி சந்திக்க நேரமும் தந்தார் அந்த நபர்.
இந்நிகழ்வு எனக்கு ஒரு பெரிய கற்றலாக இருந்தது. இந்தச் செயல் அந்த நண்பரின் மேன்மையைக் காட்டியது. நம்மை சந்திக்க யாராவது விரும்பினால், அல்லது உதவி என்று கேட்டால் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியது. எல்லா நேரங்களிலும் இதுபோல் சாத்தியப்படாது. ஆனால் முடியும் போது செய்வது சிறந்தது.
உதவ வேண்டும் என்று நினைப்பலர், உடனே உதவி விடுவார். காக்க வைக்க மாட்டார் என்று என் தந்தை அடிக்கடி சொல்வார். அதையும் இந்நிகழ்வு எனக்கு உணர்த்தியது.
“இனிய தீபாவளி வாழ்த்துகள்”
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்