கடன் அன்பை முறிக்கும்
Debt destroys love

கடன் அன்பை முறிக்கும்

மூன்று வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் மூன்று மாதங்களில் திருப்பித் தருவதாகக் கூறி என்னிடம் பணம் கேட்டார். நம் நண்பர் தானே கேட்கிறார், அவர் கேட்டத் தொகையை எதுவும் சொல்லாமல் கொடுத்தேன்.

மூன்று மாதங்கள் கழித்து நான் கொடுத்தப்பணம் எனக்கே தேவைப்பட்டது. ஆனால் எனக்குத் தேவைப்படும் நேரத்தில், என் பணத்தை எனக்கு அவரால் கொடுக்க இயலவில்லை. இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்றார். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன்.

ஆறு மாதங்கள் கழித்தும் கொடுத்தப் பணம் திரும்ப வரவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஒரு சிறு தொகையைத் தந்தார். அமெரிக்காலில் இது போன்ற சூழல்களில் நீதிமன்றம் சென்று விடை காண்பது எளிது. இது ஒரு அனுபவமாக இருக்கும் என்றும், கடன் கொடுத்தப் பணம் திரும்ப வர வேண்டும் என்று எண்ணியும், தேவையானச் செலவுகளைச் செய்தேன். வெற்றியும் கிடைத்தது. ஆனால் கடன் கொடுத்தப் பணம் திரும்ப வரவில்லை. நண்பர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இதனால் எனக்கு நேரச் செலவு, பணச் செலவு. வராதப் பணம் தான் மிச்சம். கடன் அன்பை முறிக்கும், கடன் கொடுப்பது நன்கொடைக்குச் சமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதை அனுபவ பூர்வமாக  உணர இந்நிகழ்வு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top