சோமாடோ (Zomato) நிறுவனம் ஆரம்பித்து 16 வருடங்கள் நிறைவு பெற்றதை 10/7/24 அன்று செய்தித்தாள்களில் வெளியான முதல் பக்க விளம்பரத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள். ஆனால் அந்த விளம்பரம் பெரும் வருத்தம் தந்தது.
தமிழைத் தமிழில் எழுதாமல், ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்கள். தமிழுக்கு மட்டும் இந்த நிலை இல்லை. இந்தி மொழிக்கும் தான். ஒரு வினாடி நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா? அல்லது இந்தோனேசியாவில் இருக்கோமா என்றும் தோன்றியது. பெரும் கோபம் வருகிறது. அந்நிறுவனத்தின் மீது அல்ல. என் மீதும், நாம் செய்யத் தவறிய செயல்களின் மீதும்.
இந்தப் பிரச்சனையை, நாம் காலத்தின் மாற்றம் என்று கடந்து விட முடியாது. இது வருங்காலங்களில் நம்மையும், நம் பிள்ளைகளையும் பெரிதும் பாதிக்கும். இதை மாற்ற நம் ஆட்சி முறையிலும், கல்வி முறையிலும், செயல்களிலும் அடிப்படை மாற்றம் தேவை.
தற்போது உள்ள தமிழின் நிலையை மாற்றுவது ஒன்றும் கடினம் இல்லை. தொலை நோக்குப் பார்வையோடு சிந்தித்து செயல்படுத்துதல் வேண்டும்.
தமிழைத் தமிழில் எழுதுங்க.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்