49 வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனத்தில் உள்ள ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒரு புத்தகக் கண்காட்சி 49 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது என்பது பெரும் சாதனை.
இந்த வருடம், உள் நுழைய, நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை. இதனால் நேரமும் மிச்சம். வரவேற்கத்தக்கது. நாமும், பிள்ளைகளும் வாசிக்கிறோமோ இல்லையோ, ஒரு சுற்றுலா போல் குடும்பத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு செல்லுங்கள். நானும் பல சமயம் வாங்கிய புத்தகத்தை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்: ). பின்னாளில் வாசித்ததும் உண்டு.
இன்றைய காலக்கட்டத்தில் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் நம் பிள்ளைகள் தமிழ் புத்தகங்கள் வாசிப்பது என்பது பெரும் சவால் தான். இந்த நிலை நிச்சயம் மாறும் . இந்த நிலையை மாற்றும் ஒரு முயற்சியாக கோதை அரங்கில் (அரங்கு எண்-390 ) ‘தூது ‘விளையாட்டை நீங்கள் விளையாடலாம். அதை வாங்கி உங்கள் வீடுகளிலும் குடும்பத்தோடு விளையாடலாம்
நான் எழுதிய பெரியண்ணன் எழுதப்படாத வரலாறு மற்றும் பொன்னி இதழ்ந்தொகுப்பு அறிமுகம் (1947-1955) நூலும் இதே அரங்கில் கிடைக்கும் .
‘புத்தகக் கண்காட்சி காலை 11 மணிமுதல். – இரவு 8:30 மணி வரை நடைபெறுகிறது. கடைசி நாள் வரும் புதன்கிழமை 21 ஆம் தேதி.
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்