மார்ச் 14, 2026 அன்று, 85 வயது நிரம்பிய இராசேந்திரன் ஐயா, நான் எழுதிய பெரியண்ணன்-எழுதப்படாத வரலாறு புத்தகத்தை அவர் நண்பர் புலவர் தங்க சங்கர பாண்டியன் ஐயா மூலம் பெற்று, வாசித்து முடித்த பின், எனக்கு ஒரு 8 பக்க கடிதத்தை கைப்பட எழுதி அனுப்பினார்.
ஒரு கடிதம் வந்திருக்கிறது. என்ன என்று வாசிப்போம் என்று தான் நானும் வாசிக்க ஆரம்பித்தேன். ஐயா இராசேந்திரன் அவர்கள் மறைந்த இராம.கலியாணி (சுயமரியாதை இயக்கம்) அவர்களின் மகன்.
திராவிட இயக்கங்களை வளர்க்க ‘பொன்னி’ இதழின் பங்கு பற்றி நான் அறிந்திருந்தாலும், இராசேந்திரன் ஐயா அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் பல அரிய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் பயன்படுத்திய மர Body கட்டப்பட்ட ஊர்தி புதுக்கோட்டையில் திரு பெரியண்ணன் வீடு நோக்கி வந்து நின்றது, அறிஞர் அண்ணாவின் “நீதித்தேவன் மயக்கம் புதுகை வெஸ்ட் டாக்கீசில்” அரங்கேறியபோது, அண்ணா பெரியண்ணன் வீட்டில் தங்கியது.
கா.அப்பாதுரையார் – அலமேலு சுய மரியாதைத் திருமணத்திற்கு பெரியண்ணன் வீட்டில் தரப்பட்ட விருந்து என்றும் பல தகவல்களை இராசேந்திரன் ஐயா பகிர்கிறார்.
இராசேந்திரன் ஐயா அவர்களின் 8 பக்க கடிதம் நம் பெரியண்ணன் ஐயா பற்றிய அரிய தகவல்கள் மட்டுமல்ல, அக்காலத்தில் திராவிட இயக்கங்கள் எப்படி தோன்றி வளர்ந்தன என்பதைப் பற்றி அறியவும் ஒரு ஆவணமாக இருந்தது.
முழு கடிதத்தை கருத்துப் பகுதியில் பார்க்கலாம். நன்றி! இராசேந்திரன் ஐயா…
நன்றி
கார்த்திக் சிதம்பரம்