காந்தி எழுதிய My Experiments with Truth புத்தகத்தில் சில பக்கங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்னர் காந்தி தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழி கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இங்கு உள்ள தமிழ் மாணவர்கள் தமிழ் பேசுகிறார்கள் ஆனால் அவர்களுக்குத் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார் உருது பேசும் மாணவர்களுக்கு உருது எழுத்துக்களை நன்கு வாசிக்கத் தெரிகிறது என்றும் எழுதுகிறார்.
தமிழ் எழுத்துக்களின் பிரச்சனை நூறு வருடங்களுக்கு முன்பும் இருந்ததை உணர முடிகிறது. இன்று தமிழ் நாட்டிலும், அன்று தென் ஆப்ரிக்காவில் இருந்த அதே நிலைதான். எத்தனை பேருக்குத் தமிழை எழுதவும் படிக்கவும் தெரிகிறது?
இந்த வருந்தத் தக்க நிலையை ஒரு பிரச்சணையாகக் கருதாமல் மாற்றக்கூடிய ஒரு பெரும் வாய்ப்பாகவும் பார்க்கலாம். ஒரு மொழி அழிவதும் வளர்வதும் நாம் அம்மொழியை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தும் மாறும். நாம் தமிழை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தொடங்கி அடிப்படை மாற்றங்கள் தேவை. சிறுசிறு முயற்சிகள் பெரு மாற்றங்களுக்கு வித்திடும்.
தற்போது உள்ள தமிழின் நிலை மாறும்….
மாற்றுவோம்.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்