எக்கூர் அரசு பள்ளி கிருஷ்ணகிரி / TNF
எக்கூர் அரசு பள்ளி கிருஷ்ணகிரி / TNF

எக்கூர் அரசு பள்ளி கிருஷ்ணகிரி / TNF

“கல்வியே சிறந்த ஆயுதம்.

அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation – TNF) தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு பள்ளிதான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளி.

கடந்த வாரம் இந்த பள்ளி செல்லும் வாய்ப்பினை பெற்றேன். இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஜவ்வாது மலை அடிவாரத்தைச் சேர்ந்த மக்கள்.

காட்டுக்கு அருகே வாழும் இம் மக்கள் கரடு முரடான பாதைகளைக் கடந்து தான் பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது. தினமும் பள்ளிக்கு வருவது என்பது இப்பகுதி மக்களுக்கு சாதாரண காரியம் அல்ல. இதனால் பல பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமலும் போனது.

தன் எக்கூர் பயணத்தின் போது இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மூலம் தெரிந்து கொண்ட ஆஸ்டினைச் சேர்ந்த அருண் அருணாச்சலம் TNF Austin Chapter மூலமாக பள்ளிக்காக ஒரு வாகனத்தை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

TNF Austin Chapter எக்கூர் அரசு பள்ளிக்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து, அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டு, தமிழ்நாடு அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளியின் முன்னால் மாணவர் ஓட்டுநராக தினசரி இந்த வாகனத்தை ஓட்டுகிறார்.

TNFன் இந்த முயற்சியால் பல்வேறு நன்மைகள் பள்ளிக்கும், ஊருக்கும் ஏற்பட்டு உள்ளது. எக்கூர் சென்று பார்த்தவுடன் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’ புத்தகம் ஞாபகம் வந்தது.

எக்கூர் அரசு பள்ளி மாணவர்களுடன் உரையாடும் போது இந்திய ஆட்சிப் பணி (IAS), மருத்துவர் என்று பல்வேறு கனவுகளுடன் வலம் வந்தனர். இந்த மாணவர்களின் திறன் மேம்பட TNF ஆசிரியர் ஒருவரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

தேவைகள் அதிகம் இருந்தாலும், TNF ஏற்படுத்திக் கொடுத்து வரும் இந்த வாகனம் மற்றும் எண்ணற்ற முயற்சிகள், மாணவர்களின் கனவுகள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் போன்றவை பெரும் மாற்றங்களுக்கு வித்திடும்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top