பாரத் – இந்தியா

பாரத் – இந்தியா

பாரத் – இந்தியா என்ற இரண்டு பெயர்களுக்கும் வரலாறு உண்டு.

இந்தியாவின் பெயர் மாற்றப்படுமா, படாதா என்பது இதுவரை நமக்குத் தெளிவாகத் தெரியாது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாரதவம்சம் பரத அரசனால் குறிப்பிடப்படுகிறது.

பரத அரசன் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. பாரதம் என்னும் பெயர் விஷ்ணுபுரானத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல் இந்தியா என்ற பெயருக்கும் வரலாறு உண்டு. இண்டஸ் நதிக்கரையின் தெற்குப் பகுதியில் உள்ள மக்களை இந்தியர்கள் என்றும் அந்த நிலப்பரப்பை இந்தியா என்றும் அழைத்தனர். இந்தியா என்ற பெயர் தமிழில் இருந்து வந்தது என்றும் ஐந்திரன் என்ற பெயர் இந்திரனாக மாறி இந்திரர் நாடாகி பின் இந்திய நாடாகிறது என்று 1909ல் அயோத்திதாசர் எழுதியதாக மாநிலங்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகிறார்.

1996ல் மதராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறியது. தற்போது உள்ள தமிழின் நிலை தொடர்ந்து சென்னையில் தமிழின் பயன்பாடு மேலும் குறைந்தால் 2096ல் அல்லது 2196 லோ சென்னையின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பெயர் மாற்றங்கள் ஒருவகையில் கால, அரசியல் மாற்றங்களைக் குறிக்கின்றன. பாரத் – இந்தியா, சில பிரச்சனைகளை அப்படியே விட்டு விடுவது நல்லது. புது பிரச்சனைகளை உருவாக்காமல் இருப்பது அதைவிட நல்லது .

வளரும் நாடாக இருக்கும் நாம் வளர்ந்த நாடாக மாற வேண்டும் நம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். நம் கவனமும் செயல்பாடும் இதை நோக்கி இருத்தல் வேண்டும்

நல்வழியில் பயணிப்போம். 

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top