சட்டசபை இருக்கை
சட்டசபை இருக்கை

சட்டசபை இருக்கை

நம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் உறுப்பினர்களுக்கு இருக்கைகள், கட்சிவாரியாகவும் பெரும்பான்மை வாரியாகவும் ஒதுக்கப்படுகிறது.

நம் தமிழக சட்டமன்றத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இன்னும் மாற்றம் செய்யாமல், இந்தப் பிரச்சனை தொடர்ந்து ஒரு சிக்கலாக உள்ளது. சென்ற வாரம் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் இது எதிரொலித்தது. ஆரோக்கிய விவாதம் நடத்தப்படாமல் நேரம் வீணடிக்கப்பட்டது. நம் சபாநாயகர் இதில் ஒரு முடிவை எடுக்காவிட்டால் அடுத்தமுறை கூடும் கூட்டத்திலும் நேரம் வீணடிக்கப்படலாம்.

நாம் பள்ளியில் படிக்கும் போது ஆறாம் வகுப்பில் இருந்து, பத்தாம் வகுப்பு வரை ஒரே இருக்கையில் அமர்ந்து படித்தால், பலதரப்பட்ட நண்பர்களுடன் பழகி கற்கும் வாய்ப்பு கிட்டாது. ஒவ்வொரு வருடமும் வகுப்பு மாறும் போது இருக்கையும் மாறும்.

தற்போது உள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி 234 தமிழக சட்டசபை உறுப்பினர்களும் பழகும் வகையில் வருடா வருடம் சட்டசபை உறுப்பினர்கள் உட்காரும் முறையை மாற்றி அமைத்தால் என்ன? ஒரு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து அமர்ந்தால் என்ன? இது போன்று ஒரு சோதனை முயற்சி செய்தால் நாம் கற்க நிறைய வாய்ப்பு உள்ளது.

மக்களின் பிரச்சனைகளைப் பேசி ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தும் இடம், சட்டமன்றம். அதில் உறுப்பினர்கள் பங்கேற்கும் நேரத்தை வீணடிக்காமல், ஆரோக்கிய விவாதம் செய்து அனைவரும் கற்கும் வகையில் ஒரு முன்மாதிரி சட்டமன்றத்தை உருவாக்குவோம்.

பிரச்சனைகளை வாய்ப்புகளாக மாற்றுவோம்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top