சென்ற வாரம் ஞாயிறு கடிதத்தில் சேமிப்பு பற்றி எழுதினோம். பணம் இருந்தால் தானே சேமிக்க இயலும் என்று சிலர் கேட்டீர்கள். இந்த வாரம் பணம் செய்ய விரும்பு.
ஒருவர் மிக நல்லவராக இருந்தாலும் அவரிடம் பணம் இல்லை என்றால் உலகில் அவரின் மதிப்பு பலரின் பார்வையில் குறைவுதான்.
இந்த முறை தவறானது என்றாலும், இன்றைய உலகில் பிள்ளைகளின் கல்வி, தேவைகள், பயணம், பொருட்கள் போன்றவற்றுக்குப் பணம் தேவைப்படுகிறது. பணம் ஈட்டுவது ஒரு விளையாட்டு போன்று தான். விளையாட விளையாட நம் திறமைகள் மேம்படும்.
பணம் ஈட்டுவதில் சிரமம் இருந்தால் எங்கே தவறு செய்கிறோம் என்று சற்றே சிந்தியுங்கள். கடின உழைப்பை உரமாக இடுங்கள். உங்களைச் சுற்றி உள்ளோரிடம் ஆலோசனை கேளுங்கள். பணம் ஈட்டியவர்களின் வெற்றிப் பாதையை இணையத்தில் தேடுங்கள்.
உங்கள் உழைப்புக்கு உரிய பலன், சிறு சிறு மாற்றங்கள் புது முயற்சிகள் மூலம் நிச்சியம் கிட்டும்.
நல்வழியில் பணம் செய்ய விரும்புங்கள்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்