சேமிப்பு
Savings

சேமிப்பு

பணம் இருக்கும்போது அதன் அருமை பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. எதைப் பார்த்தாலும் வாங்கத் தோன்றும். நம்மைச் சுற்றி உள்ளோர், அது, இது வைத்திருக்கிறார்கள், நாமும் வாங்க வேண்டும் என்று தோன்றலாம்.

பணம் எளிதாகக் கிடைக்கிறது என்பதற்க்காக அதே நிலை எப்போதும் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. பணம் சம்பாதிப்பதை விட முக்கியம் அந்தப் பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்லது. 

நாளை ஒரு தேவை, பிரச்சனை என்று வரும்போது, யாரிடம் போய் கேட்பது? யார் தருவார்கள் ? அந்த ஒரு நிலை வராமல் இருக்க பணத்தைச் சேமியுங்கள்.

சிறுகச் சிறுகப் பணம் சேர்க்கும், சேமிக்கும் போது அது ஒரு வித மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் நமக்குத் தரும். பணம், புதுமுயற்சிகள் எடுக்கத் தூண்டும். 

பணம் இல்லாதபோது ஒரு வித தளர்ச்சி ஏற்படலாம். அவ்வாறு இல்லாமல் நம்பிக்கையோடு இருங்கள். 

உங்கள் முதல் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பணத்தைச் சேமியுங்கள். இதுவரை சேமிக்கவில்லை என்றால் வருத்தப்படாமல் இன்றிலிருந்து சேமிப்பைத் தொடங்குகள்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: savings
Share
Download Download
Top