தோல்விகளைக் கொண்டாடுங்கள்

தோல்விகளைக் கொண்டாடுங்கள்

சிறு வயதில் பிள்ளைகளிடம் நீங்கள் என்ன ஆக வேண்டும்? என்று கேட்டால் மருத்துவர், விமானி, விளையாட்டு வீரர் என்று பல கனவுகள் இருக்கும். பெரும்பாலும் ஒருவர் படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பே இருக்காது. அதுபோல் தான் மருத்துவப் படிப்பும்.

2023ல் 20,36,316 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள் . ஆனால் இந்திய அளவில் உள்ள மருத்துவச் சேர்க்கை எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,04,333 தான். தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 5225, தனியார் கல்லூரிகளில் 6000 தான்.

கலந்தாய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர உங்களுக்கு இடம் கிடைத்தால் வாழ்த்துகள். ஒரு வேலை உங்கள் முயற்சி வெற்றி பெறவில்லை என்றால் நான் நன்றாகப் படித்தேன், நன்றாக நீட் தேர்வு எழுதினேன், பெரும் முயற்சி செய்தேன். ஆனாலும் நீட்டில் தேர்வாகவில்லை என்று பெருமையாகச் சொல்லுங்கள். தோல்விகளைக் கொண்டாடுங்கள்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்குத் தோல்விகளைக் கொண்டாடச் சொல்லித் தர வேண்டும். 

இதுவே வெற்றி தரும்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top