இந்திய அரசு திட்டங்கள், சட்டங்கள்

இந்திய அரசு திட்டங்கள், சட்டங்கள்

நம் பிரதமர் மோடி அண்மையில் இரயில்வே அமைச்சகத்தின் – AMRIT BHARAT STATION Scheme என்று இரயில் நிலையங்களைப் புதுப்பிக்கும் திட்டத்தை தொடங்கினார்.

அது போல் ,

  • स्वच्छ भारत (Swachh Bharat) 
  • PRADHAN MANTRI JAN-DHAN YOJANA 
  • POSHAN ABHIYAN

நம் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய தண்டனைச் சட்டம் என்ற பெயருக்குப் பதிலாக BHARATIYA NYAYA SANHITA என்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு பதிலாக ‘BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA’ என்றும் இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு பதிலாக ‘BHARATIYA SAKSHYA’ என்றும் மாற்ற நாடளுமன்றத்தில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த திட்டங்கள், சட்டங்கள் பெயர்களில் உள்ள ஒற்றுமை? – இந்தி (HINDI)

இதற்குப் பதிலாக இந்திய அரசின் திட்டக்களுக்கு நம் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் ஒன்றில் ஒவ்வொரு முறையும் பெயர் வைத்தால் என்ன?

உதாரணமாக PRADHAN MANTRI JAN DHAN YOJANA – வுக்கு பதில் எல்லாரிகு பையாங்க் காதே யோஜனே என்று ஒரு முறை கன்னடத்திலும்,

POSHAN ABHIYAN க்கு பதில் போஷாண காதாரி காரியக்ரம் என்று ஒருமுறை குஜராத்தியிலும்,

Swachh Bharat க்கு பதில் `தூய்மை இந்தியா’ என்று ஒரு முறை தமிழிலும் பெயர் வைத்தால் என்ன? 

இதுபோல் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துப் பெயர் வைப்பதன் மூலம் இந்தியாவின் பலமான வேற்றுமையில் ஒற்றுமை (UNITY IN DIVERSITY) மேலும் பலம் பெறும். இந்திய மொழிகள் வளர்வதற்கும் இது வழிவகுக்கும். 

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top