தூது’ தமிழ்ப் பலகை விளையாட்டை 2026 ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தினோம். இன்று சென்னையின் பிரபல கஃபேக்களில் தூது விளையாட்டு மிக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பல கடைகளில் தூது விற்கப்படுகிறது இவை நமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தாலும் அமேசான் தளத்தில் நம் தூது விளையாட்டை விற்க இயலவில்லை.
அமேசானில் விற்பது அவ்வளவு கடினமா?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இதற்குக் காரணம் `தூது ‘ விளையாட்டின் முகப்பு அனைத்தும் தமிழில் இருப்பதுதான்.
பிராண்டின் பெயர், விளையாட்டின் பெயர், தகவல்கள் என அனைத்தும் தமிழில். இதை வடிவமைக்கும்போது, அட்டையின் வெளிப்புறத்தில் ஆங்கிலத்தில் அல்லாமல் தமிழில் இருந்தால் என்ன?
நம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் பலகை விளையாட்டின் அட்டை தமிழில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் வேறு மொழிகளைச் சேர்க்காமல் நம் தமிழில் வடிவமைத்தோம்.
அமேசான் இதை ஏற்கவில்லை. நம் இந்திய நாட்டில் இயங்குகிற ஒரு நிறுவனம், நம் நாட்டு மொழிகளை ஏற்க இயலாது என்று கூறுவது, வேடிக்கை, வேடிக்கை. தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதே நிலைதான்.
தமிழின் இன்றைய நிலைக்கு அரசும், நாமும் பொறுப்பேற்க வேண்டும். கோபம் வருகிறது. கோபம் வருகிறது. சரி,… அமேசானில் இல்லாவிட்டால் என்ன? நீங்கள் நம் தூது விளையாட்டை போர்ட்ரூம் கஃபே, கதை, கனெக்சன்ஸ், நார் போன்ற கடைகளில் வாங்கலாம்.
நம் தமிழ்! நம் தமிழ்நாடு!
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்