தமிழ் வாசிப்பு
Tamil reading

தமிழ் வாசிப்பு

முகமது அயான் என்ற நண்பர் சைபிரியன் என்ற அமைப்பிற்காக இணைய பாதுகாப்பு (Cyber Security) குறித்து மாணவர்களிடையே உரையாற்ற சென்ற வாரம் அழைத்தார். நான் இணையப் பாதுகாப்பு வல்லுநர் இல்லை என்றாலும் எனக்குத் தெரிந்ததை மாணவர்களிடையே பேசலாம் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையம் வழியாக 20 மாணவர்களிடையே உரையாடினேன். இது வெறும் உரையாடலாக இல்லாமல் கலந்துரையாடலாக மாறியது.

கிண்டி அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் குறித்து என்ணிடம் சில கேள்விகளைக் கேட்டார். நான் அந்த மாணவரிடம், உங்கள் சொந்த ஊர் எது? என்றும், தாய்மொழி என்ன என்றும் கேட்டேன். சென்னை, தமிழ் என்று கூறினார். சென்னையில் பிறந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழ்நாட்டில் வளர்த்த மாணவராக இருக்கிறாரே ஒரு சோதனை முயற்சியாக, நான் என் கணினித் திரையை, கூகுள் மீட் வழியாகப் பகிரிந்து விகடன் இணையதளத்தைக் காண்பித்து அந்த மாணவரிடம் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னேன்.

அந்த மாணவ நண்பர் சற்று வெட்கப்பட்டு, மன்னிக்கவும் எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்றார். எனக்கு ஆச்சிரியமாக இல்லை. ஆனால் இதுவே தமிழ்நாட்டில் பெரும்பாலும் இன்றைய தமிழின் நிலை.

மாற்றுவோம்.

நன்றி… 

கார்த்திக் சிதம்பரம்.

Category: Sunday letter
Share
Download Download
Top