தமிழ் சேவை இல்லை
Tamil service

தமிழ் சேவை இல்லை

அமெரிக்காவில் இருந்து நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். அவரோடு பேசுகையில், தமிழில் பலகை விளையாட்டுகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இது தமிழை அனைவரிடமும் எளிதில் கொண்டுசேர்க்க பயன்படும் என்று கூறினேன். நண்பர்… நல்லது. இதை சேவை மனப்பான்மையோடு செய்து கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டார். சிரித்தேன்!

தமிழால் பயன் அடைவோர் எண்ணிக்கை ஏராளம். நாம் தமிழை சேவை மனப்பான்மையோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நானும் அப்படி பார்க்கவில்லை. ஒரு மொழி வளர, அந்த மொழி நம் வாழ்வியலோடு ஒன்றிணைய வேண்டும். மொழியைக் கொண்டு பொருள் ஈட்ட வேண்டும்.

இந்தப் பலகை விளையாட்டுகளை ஒரு தொழிலாகத் தான் பார்க்கிறோம். இதைக் கொண்டு பணம் ஈட்ட வேண்டும் என்பதே எண்ணம் என்றேன். 

நண்பரும் ரசித்தார்.

என்னைப் பொருத்தவரை, தமிழை ஒரு சேவை மனப்பான்மையோடே பார்த்துக் கொண்டிருந்தால் தமிழ் வளராது. 

தமிழ் தனித்து இயங்க வேண்டும். 

தமிழ் மூலம் பொருள் ஈட்ட வேண்டும்.

பணம் பண்ணலாம் வாங்க…

தமிழைக் கொண்டு பணம் பண்ணலாம் வாங்க. 

தமிழ் சேவை இல்லைங்க…

நன்றி… 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top