தங்கள் பிள்ளை முத்து எப்போதும் முதலிடம் வர வேண்டும் என்று எண்ணினர் அவனின் பெற்றோர். வீட்டில் முத்துவிற்கு பல கண்டிப்புகள். காலையில் இத்தனை மணி நேரத்திற்கு எழ வேண்டும், தூங்கும் நேரம் இது, இவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்று தன் பெற்றோர் சொல்லும் அனைத்தையும் ஒரு பயத்தோடு செய்தான் சிறுவன் முத்து.
பெற்றோர், முத்துவிற்கு அனைத்தையும் சொல்லித் தந்தனர். அவர்கள் சொல் படி கேட்டதால் வகுப்புகளில் முத்துவிற்கே முதலிடம். தோல்வி என்பதையே அவன் பார்த்தது கிடையாது. பெற்றோர் கடும் கண்டிப்புடன் துணை இருந்ததால் எதிலும் முதலியம் தான்.
முத்து விற்கு 18 வயது ஆனது. பெற்றோர் பெருமை கொள்ளும் மிகச் சிறந்த கல்லூரியில் சேர்ந்தான். கல்லூரியில் முத்துவை கண்டிக்க யாரும் இல்லை. படிப்பில் இருந்த கவணம் முற்றிலும் சிதறியது. மது அருந்துதல் அன்றாடப் பழக்கமாகிப் போனது. நான்காண்டு கல்லூரிப் படிப்பை எட்டு ஆண்டுகளில் முடித்தான் முத்து.
பள்ளியில் தோல்விகள் பல கண்டு பின்தங்கிய முத்துவின் நண்பர்கள் முன்னேறி நல்ல நிலையில் இருப்பதையும், தங்கள் கண்டிப்பால் முதலிடத்தில் இருந்த மகன் முத்து பின்தங்கி இருப்பதை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டனர் பெற்றோர்.
இந்த முறை முத்துவை அவன் பெற்றோர் கண்டிக்கலில்லை. கண்டிக்கவும் முடியவில்லை. தோல்லிகளை ருசிக்க வேண்டும், அதில் இருந்து மீள வேண்டும் என்பதை அவன் பெற்றோர் கற்றுக் கொண்டனர். முத்துவும் கற்றுக்கொண்டான்
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்