எழுதி பகிருங்கள்
write

எழுதி பகிருங்கள்

நாம் எழுதும் போது, அதைப் பகிர சில சமயங்களில் நமக்குத் தயக்கம் வரும். இதையெல்லாம் யார் படிப்பார்கள் என்று தோன்றலாம். அல்லது, நாம் எழுதியது சரிதானா? என்ற எண்ணம் கூட வரலாம். இதுபோல் தான் ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது.

இருமுறை நான் LinkedIn தளத்தில் (லிங்டின்) எழுதி பகிர்ந்த போது, அந்தப் பதிவில் தவறுகள் சில இருந்தன. நண்பர் ஒருவர் கருத்துப் பகுதியில், என் பதிவில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி என் மீது கோபப்பட்டார். உடனே நான்.. அதனால் என்ன நீங்கள் கூறுவது சரிதான் என்று சொல்லி என் பதிவில் திருத்தம் (Edit) செய்து கொண்டேன். கோபமாக எழுதிய நண்பரும் பாராட்டினார்.

இது போன்ற சமூகத் தளங்களில், நாம் எழுதியதைத் திருத்தம் செய்து கொள்வது ஒரு பெரு வசதி. அதனால் எழுதியதைப் பகிரலாமா, வேண்டாமா என்றெல்லாம் யோசிக்காமல் எழுதியதைப் பகிருங்கள். பிறரின் பின்னூட்டம் நம் வளர்ச்சிக்குப் பயன்படும். 

எழுத எழுத பழகி விடலாம் . 

பகிர பகிர பழக்கமாகிவிடும்….  எழுதி பகிருங்கள்…..

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top