சில சமயங்களில், சூழல், பயணம் அல்லது வேறு சில காரணங்களால் நாம் தினமும் செய்யும் வேலையில் கவனம் செலுத்த இயலாமல் போகும். அதுவும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான்.
ஒரு முறை என் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த போது, தன்னால் சிலவற்றை திறம்பட செய்ய முடியவில்லை என்றும், அதற்கு சில காரணங்களையும் நேர்மையோடு கூறினார். அது போன்ற ஒரு சூழல் நமக்கும் ஏற்படலாம்.
வேலை நம் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பகுதி. ஆனால் நம் வாழ்க்கை வெறும் வேலை மட்டும் இல்லை. இதை நாம் நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டால், நாம் செய்யும் பணி சிறக்கும்.
நம்மைப் போல் தான் அனைவரும்
முதலில் நம் வாழ்க்கை,
பின்னர்தான் நாம் செய்யும் வேலை.
எதைச் செய்தாலும் நேர்மையுடன் செய்வோம்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்