தமிழகத்தில் ஏப்ரல் 19 ம் தேதி பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு ஓட்டு போடலாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையைத் தேடினேன்.
அனைவருக்கும் புரியும் படி ஒரு பக்கத்தில் தேர்தல் அறிக்கை இருந்தால் என்ன? அல்லது வருடத்திற்கு ஒரு பக்கம் என்ற விகிதம் ஐந்து பக்கத் தேர்தல் அறிக்கை? அது செய்வேன், இது செய்வேன் என்று சொல்பவர்களை நம்பக் கூடாது. சரி, யாரை நம்புவது?
நேற்று பயணம் செய்த ஆட்டோவில் ஒட்டுனரிடம் ‘அடுத்து யார் வருவார்கள்’ என்று கேட்ட போது, யார் வந்தால் என்ன சார்? நான் ஆட்டோ ஓட்டினால் தான் எனக்குக் காசு. யாரை நம்பியும் நான் இல்லை என்றார். ஆனால் கண்டிப்பாக ஒட்டுப் போடப் போவேன். அது என் உரிமை அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? என்றார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பொத்தானை (BALLOT BUTTON) அழுத்தும் முன், ஒரு ஐந்து வினாடி யோசிப்போம். சிந்தித்து, நம் உரிமையைக் கொண்டாடி வாக்களித்து, மகிழ்வோம்.
யாருக்கு ஒட்டு?
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்