பெரியண்ணன் ஐயாவின் நூற்றாண்டினை கொண்டாடும் விழாவில் மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா அவர்கள் கலந்து கொண்டு பெரியண்ணன் ஐயாவைப் பற்றியும், திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் ‘பொன்னி’ இதழின் பங்கு குறித்தும் ஒரு மிகச் சிறப்பான உரை ஆற்றினார்.
அவரின் பேச்சு நடையிலும், உரையிலும் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
வாரம் தோறும் கைப்பட எழுதும் ஞாயிறு கடிதத்தில் தேதி எழுதும் போது வருடத்தைக் குறிக்க 25 என்று தான் எழுதுவேன். ஒரு நூறு வருடங்கள் கழித்து “நாம் எழுதியதை யாராவது வாசித்தால் அது 1925 ஆ அல்லது 2025/2125ஆ என்பது தெரியாமல் போகும். எனவே வருடத்தை எழுதும் போது நான்கு எண்களோடு 2025 என்று முழுவதுமாக எழுத வேண்டும் என்று திருச்சி சிவா அவர்கள் பேசினார்கள்.
என் முந்தையக் கடிதங்களில் இதைப் பின்பற்றவில்லை என்றாலும், அரு. பெரியண்ணன் – மீனாட்சி நூற்றாண்டு விழா நடைபெற்ற 25/9/2025ல் இருந்து நான்கு எண்களையே எழுதுகிறேன்.
இனி வரும் ஞாயிறு கடிதங்களில் நான்கு எண்கள் கொண்ட வருடங்களையே பார்ப்பீர்கள் .
இன்றைய தேதி 12/10/2025
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்