ஒரு திருமண விழாவிற்கு அம்மாவும், 10 வயது சிறுமியும் (மகள்) அவர்கள் குடும்பமும் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மா, சிறுமியிடம் இந்தப் பாவாடையைக் கட்டிக்கொள், நன்றாக இருக்கும் என்றாள்.
சிறுமி என்னால் இதை உடுத்த முடியாது என்று அடம் பிடித்தாள். அம்மா, சற்று குரலை உயர்ந்த சிறுமி முடியவே முடியாது என்று சொல்லி இன்னும் அதிகமாக அழுதாள். வீட்டில் இருந்த பாட்டி, பேத்திக்கு எது பிடிக்கிறதோ போட்டுக் கொள்ளட்டும். வற்புறுத்தாதீர்கள் என்றார்.
அம்மா, உடனே நான் சிறுமியாக இருக்கும் போது எங்கள் வீட்டில் ஒரு பாவாடை மட்டும் தாண் இருக்கும். நாங்கள் எல்லாம் எதுவும் பேசாமல் போட்டுக் கொள்வோம். நீங்கள் எல்லாம் 8 பாவாடை மற்றும் இவ்வளவு இருந்தும் அடம் பிடிக்கிறீர்கள் என்றாள்.
உடனே அந்தச் சிறுமி அம்மாவிடம் உங்களுக்கு ஒரு பாவாடை மட்டும் தான் இருந்தது ஆனால் எனக்கு மட்டும் ஏன் 8 பாவாடைகள் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டாள். அம்மாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
தேவைக்கு அதிகமாக இருக்கும் போது அதன் அருமை தெரியாது. சிறுமி கேட்ட கேள்வி சரிதான்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்