அரு. பெரியண்ணன் – மீனாட்சி நூற்றாண்டு விழாவிற்கு 25/9/2025 அன்று வந்து சிறப்பித்த நண்பர்கள், மாணவர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
பெரியண்ணன் எழுதப்படாத வரலாறு மற்றும் “பொன்னி” இதழ்த் தொகுப்பு அறிமுகம் நூல்களை வெளியிட்ட மாண்புமிகு அமைச்சர் எஸ். எஸ். ரகுபதி அவர்களுக்கும், பெற்றுக்கொண்ட மதிப்பிற்குரிய மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா அவர்களுக்கும் நன்றிகள்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் நன்றிகள்.
இந்த நூற்றாண்டு விழா முயற்சிக்கு பெரும் பங்காற்றிய சென்னை கிறித்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர் சா. கருணாகரன் அவர்களுக்கு நன்றிகள்.
ரோஜா முத்தையா நூலகத்திற்கும், அதன் இயக்குநர் சுந்தர் கணேசன் அவர்களுக்கும் நன்றிகள்.
மாணவர்கள் சௌமியா, கார்த்திகேயன், சபரிகா, உமாதேவி மற்றும் நந்தனின் கற்றல் பகிர்வுரை விழாவினை பன்மடங்கு சிறக்கச் செய்தது. இவர்கள் அனைவரும் தமிழ்த்துறை மாணவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த முயற்சி பல கற்றல்களைத் தந்தது. இதை ஒரு தொடக்கமாகத்தான் பார்கிறோம்.
அரு. பெரியண்ணன் – மீனாட்சி குடும்பத்தின் சார்பாக நன்றிகள்.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்