ஞாயிறுதோறும் கைப்பட எழுதி பகிரும் ஞாயிறு கடிதந்தை வாசித்து தொடர் ஊக்கம் தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று உங்கள் கடிதத்திற்காகக் காத்திருப்போம் என்று பலர் சொல்வது மகிழ்ச்சி தருகிறது.
ஞாயிறு கடிதம் தந்த நம்பிக்கை தான் ‘பெரியண்ணன் – எழுதப்படாத வரலாறு புத்தகமும் என்னால் எழுத முடிந்தது. இந்தப் புத்தகமும் ஒரு கூட்டு முயற்சி தான் . .
உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் வாசிக்கும் ஞாயிறு கடிதத்தை உங்கள் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் பகிருங்கள். உங்களில் பலர் இதை ஏற்கனவே செய்வதற்கு நன்றி. பல மாணவர்க்கும் ஞாயிறு கடிதத்தை வாசிப்பது மகிழ்ச்சி.
நீங்களும் எழுதுங்கள்.
பகிர்வோம் வளர்வோம் .
2026 லும் ஞாயிறு கடிதம் தொடரும் .
இனிய வளமான, வலிமையான புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்.