தமிழ்நாட்டு பொருட்களில் தமிழ்
Tamil in Tamil Nadu products

தமிழ்நாட்டு பொருட்களில் தமிழ்

தமிழ்நாட்டில் நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களில் தமிழே இல்லை என்று மார்ச் 2023’ல் ஒரு சிறு காணொளி பதிவிட்டேன். அது நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. அண்மையில் வேறு சில முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது ஸ்வேதா ராஜா உருவாக்கிய சில பொருட்களின் தமிழ் வடிவத்தைப் பார்த்தேன்.

ஒரு பொருளை நம் ஊரில் வாங்கும் போது அதைக் குறிக்கும் சொற்கள் நம் மொழியில் தானே இருக்க வேண்டும்? பல்லேறு உலகநாடுகளில் அவரவர் மொழியில் தானே பொருட்களை சந்தைப்படுத்தி விற்கின்றனர்? ஆனால் நம் இந்திய நாட்டில், தமிழ் நாட்டில் ஏன் இந்த அவலநிலை 

சரி, தனியார் நிறுவன பொருட்கள் ஒரு புறம் இருக்கட்டும். ஆ என்றால் மாடு… அந்த மாட்டின் பால் ‘ஆவின்’  இவ்வளவு அழகாக பெயர் வைக்கப்பட்ட ஆவின் கூட ‘NICE’ என்று இன்று விற்கிறது? சில சமயங்களில் இதை நினைக்கையில் சிரிப்பு தான் வருகிறது.

வர்த்தகத்தில் 20 லட்சத்திற்கு மேல் ஜி.டி.பி(G.D.P) இருக்கும் வளரும் தமிழ்நாட்டில் வாங்கும் பொருட்களில் தமிழ் இல்லை என்பது நாம் மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று

தமிழ் வளரும், தமிழ் வளரும் என்று மட்டும் சொன்னால் தமிழ் வளராது. 

தமிழ் நம் வாழ்வியலோடு ஒன்றிட வேண்டும்.

பொருளோடு தமிழ் சேர வேண்டும். 

தமிழ்நாட்டில் வாங்கும் பொருட்களில் தமிழ் வேண்டும்.

நன்றி… 

கார்த்திக் சிதம்பரம்.

Tamil in Tamil Nadu products
Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top