ஒரு ஊரில், ஒரு பெரியவர் இருந்தார் அவர் ரொம்ப அலட்டிக் கொள்ள மாட்டார். அவரைப் பார்த்தால் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது போல் தோன்றும். நன்கு தூங்குவார். காலையில் உற்பயிற்சி செய்வார்.
அந்தப் பெரியவர் வீட்டிற்கு வந்த ஒரு சிறுவன். ஐயா, இப்படி தூங்கிக் கொண்டும் சும்மா உட்கார்ந்து கொண்டும் இருக்கிறீர்கள். ஆனாலும் ஊரில் அனைவரும் உங்களை மதிக்கிறார்கள். அனைவருக்கும் உங்களைத் தெரிகிறது. அது எப்படி? என்று கேட்டான்.
சிறுவனிடம், அந்தப் பெரியவர், தம்பி நான் நன்கு தூங்குவதால் தான் உடற்பயிற்சி செய்ய முடிகிறது. உடற்பயிற்சி செய்வதால் தான் தூக்கமும் வருகிறது. சும்மா இருப்பதால் வேலை செய்ய முடிகிறது. வேலை செய்வதால் தான் சும்மாவும் இருந்து யோசிக்க முடிகிறது என்று கூறி, நாம் நன்கு வேலை செய்ய தூக்கம் அடிப்படை என்றார். சிறுவனும் அவன் வீட்டிற்குச் சென்று நன்கு தூங்கினான்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்