வாக்காளர் பட்டியலை சரி பார்த்து திருத்தப் பணிகள் செய்வது என்பது அவசியமான ஒன்று. இதற்காக முழு ஒத்துழைப்பையும் தருவது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இதற்காக கொடுக்கப்பட்ட நம் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டு படிவத்தைப் பார்த்தேன். தலை சுற்றிப் போனேன்.
ஏற்கனவே ஆதார், வருமான வரி அட்டை ரேஷன் அட்டை போன்ற பல அட்டைகள் நம்மிடம் இருக்கின்றன. இப்போது மேலும் ஒரு படிவம். பாகம் எண், வரிசை எண் வாக்காளர் உறவினரின் பாகம் எண், வரிசை எண், சட்டமன்றத் தொகுதி எண் இதையெல்லாம் எப்படி நாம் தெரிந்து கொள்வது? அப்படியே தெரிந்து கொண்டு எழுதினாலும் அதில் சிறு தவறுகள் இருந்தால் என்னாகும்! தேர்தல் இணையதளத்திலும் இந்தப் படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய எளிதானதாக இல்லை.
யு.பி.ஐ(UPI), டிஜிட்டல் வர்த்தகம் என்று பல புரட்சிகள் செய்து தொழில்நுட்பத்தில் சிறந்து விளக்கும் நம் இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கும் இந்தப் படிவங்களைப் பார்க்கும் போது ஒருவித வருத்தம் வருகிறது.
இந்த வாக்காளர் திருத்தப் பணியை பல வழிகளில் மேப்படுத்தி நேர்மையாக, மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை.
தற்போது உள்ள தடைகளை வாய்ப்புகளாக மாற்றி செயல்பட்டால் அனைவரும் பாராட்டுவர். இதற்கு மக்களும் தங்களின் நல் ஒத்துழைப்பை நல்குவர்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்