இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது மருத்துவ நண்பர்கள் இருவரைச் சந்தித்தேன். நலம் விசாரித்துக் கொண்டோம்.
எங்களின் உரையாடல் உயிரியல் (Biology) உயிர் தகவியல் (Bio informatics), உயிர் தொழில்நுட்பம் (Bio-Tech) நோக்கி சென்றது. இந்தியாவில் இந்தத் துறைகளில் திறம்பட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் கல்லூரிகள், நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் குறித்து பேசினோம்.
அப்போது அவர்கள், இந்தியாவில் இதற்கு வாய்ப்புகள் (Scope) குறைவு. இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று கூறினர்.
எனக்கு இது குறித்து அதிகம் தெரியாவிட்டாலும், நான் அவர்களிடம் வாய்ப்புகள் இல்லை என்றால் என்ன? நாமே உருவாக்குவோம், புது தொழில்கள் கூட தொடங்கலாம்” என்பது போல் ஏதோ சொன்னேன். மருத்துவர்கள் இருவரும் நான் கூறியதை அமோதிப்பது போல் சிரித்தார்கள். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
1978ல் கிரண் மசும்தார் சா வால் உருவாக்கப்பட்ட பயோ கான் (Biocon) நிறுவனமும் இவ்வகை தான்.
உலகமயமாக்கப்பட்ட இந்தக்காலத்தில், நாம் வாழும் இடங்களில் வாய்ப்புகள் இல்லை என்றால் அதை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்.
உருவாக்குவோம்
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்